தேவையானவை:
கடலை பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
பருப்பை நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
பின் கடாயில் எண்ணைய் விட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் போட்டு தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
அதனுடன் வெந்த பருப்பை கொட்டி நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் சுவையான பூம்பருப்பு சுண்டல் ரெடி.
No comments:
Post a Comment