Sunday, 3 May 2020

உளுந்து கஞ்சி



தேவையான பொருட்கள்: 

அரிசி - 1 கப் 
உளுத்தம் பருப்பு - 1/2 கப் 
பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 5 கப் 
சுக்கு பொடி - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
பால் - 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது) 

செய்முறை: 

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். 
பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!!! இதனை ஏதேனும் துவையலுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.