தேவையான பொருட்கள்:
அன்னாசி பழம் - 1 பெரியது
பால் - 1 லிட்டர்
சீனி - 1 கப்
அண்டிபருப்பு - 10
கிஸ்மிஸ் பழம் - 10
நெய் - தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் அன்னாசி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அண்டிபருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்ததும் அதனுடன் அன்னாசி சேர்த்து வேகவிடவும். 1 லிட்டர் பால் 1/4 லிட்டர் ஆகும்வரை சுண்ட வைக்கவும். சுண்டி வந்தபிறகு அதனுடன் சீனி சேர்க்கவும்.
இப்பொது திரும்பவும் அது இளகிய நிலைக்கு வரும். அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து இறக்கவும். இது செய்வதற்கு சிறிது தாமதமானாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:
Post a Comment