Saturday, 3 September 2016

வேர்க்கடலை குழம்பு


              வேர்க்கடலை குழம்பு




 தேவையானவை:

 வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்),
தேங்காய் துண்டுகள் – 2 (அரைக்கவும்),
கடுகு, உளுத் தம்பருப்பு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
புளிக் கரைசல், பொடி யாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய் த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப் பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு… அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகா ய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வேக வைத்த வேர்க் கடலை யைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவே ப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங் காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதி க்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.