Saturday, 3 September 2016

சுக்கு குழம்பு


                              சுக்கு குழம்பு


 தேவையானவை:

 சுக்கு – ஒரு சிறிய துண்டு,
மிளகு – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ் பூன்,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
நறுக்கிய தக்காளி – கால் கப்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப் பிலை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ் பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண் ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸி யில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த தும் கடுகு, உளுத் தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளி யை ப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க் கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொ டித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.