Saturday, 3 September 2016

தக்காளி குழம்பு

                 தக்காளி குழம்பு


தேவையானவை:

 நாட்டுத் தக்காளி, பெங் களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றி ரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), 
கீறிய பச்சை மிளகாய் – 1, 
பூண்டு – 2 பல்,
பொடியாக நறுக்கிய தேங் காய் – சிறிதளவு, 
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூ ன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்),
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 


செய்முறை:

 கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு… பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.