Social Icons

Monday, 3 May 2021

அன்னாசி பழ அல்வா


 

தேவையான பொருட்கள்:

அன்னாசி பழம் - 1 பெரியது
பால் - 1 லிட்டர்
சீனி - 1 கப்
அண்டிபருப்பு - 10
கிஸ்மிஸ் பழம் - 10
நெய் - தேவையான அளவு


செய்முறை விளக்கம்: 


முதலில் அன்னாசி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அண்டிபருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து வறுக்கவும். 


அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்ததும் அதனுடன் அன்னாசி சேர்த்து வேகவிடவும். 1 லிட்டர் பால் 1/4 லிட்டர் ஆகும்வரை சுண்ட வைக்கவும். சுண்டி வந்தபிறகு அதனுடன் சீனி சேர்க்கவும். 


இப்பொது திரும்பவும் அது இளகிய நிலைக்கு வரும். அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து இறக்கவும். இது செய்வதற்கு சிறிது தாமதமானாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.