தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு - 20 பாசி பருப்பு - அரை கிலோ சர்க்கரை - அரை கிலோ கிஸ்மிஸ் பழம் - 10 நெய் - 100 கிராம்
செய்முறை
பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்து
மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதனுடன்
நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி
வைக்கவும்
பின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ்
பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி சூடாக இருக்கும் போதே சிறு
உருண்டைகளாகப் பிடிக்கவும்.
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
No comments:
Post a Comment