சேமியா - 1 கப் தண்ணீர் - 2 கப் வெல்லம் - 1/2 கப் நெய் - 3 ஸ்பூன் முந்திரி பாதாம் - கால் கப் ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி முந்திரி பாதாமை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் நெய் விட்டு சேமியா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 10 நிம்டம் அடுப்பில் வைக்கவும்.
சேமியா
வெந்ததும் அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளரி அதில் ஒரு
சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி இறக்கும் போது வறுத்த முந்திரி
பாதாமை சேர்க்கவும். சுவைாயான இனிப்பு சேமியா ரெடி.
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
No comments:
Post a Comment