Thursday, 1 September 2016

மாங்காய் குழம்பு

                      மாங்காய் குழம்பு

 

 

தேவையானவை:

சிறிய மாங்காய் – 1, பச்சைமிளகாய் , பெரிய தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 1, மஞ்சள், உப்பு , பெருங்காயம் – தேவையான அளவு, எண்ணெய், கடுகு, சீரகம்,வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு. 

செய்முறை: 

மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக விடவும். பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், தனியாத்தூள்,பெருங்காயம், தேங்காய் துருவலை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை வதக்கி, அதில் இந்த அரைத்த மசாலாவை போட்டு, வேக வைத்த மாங்காயை அதில் சேர்த்து உப்பு, மஞ்சள்,சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். இதில் வேக வைத்த பருப்பையும் போட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.


 

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.