வேக வைத்து தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - 50 கிராம், நறுக்கிய
கேரட் - 20 கிராம், நறுக்கிய பீன்ஸ் - 25 கிராம், நறுக்கிய வெங்காயம் - 50
கிராம், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு... வெங்காயம், பீன்ஸ், கேரட்,
கொத்தமல்லித்தழை மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள்
மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். மசித்து வைக்கப்பட்ட
உருளைக்கிழங்கை இதோடு சேர்த்து, சிறு தீயில் கிளறி இறக்குங்கள். கலவை சற்றே
ஆறிய பிறகு, இட்லி வடிவத்தில் வட்ட வட்டமாகத் தட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு, இரண்டு இட்லிகளை எண்ணெயில் இட்டு பொன்னிறமாகும் வரை
பொரித்தெடுங்கள். பிறகு, ஜல்லிக் கரண்டி கொண்டு அதிலிருக்கும் எண்ணெயை
வடிகட்டுங்கள். வட்டமாக தட்டி வைத்திருக்கும் உருளை மசாலாவை, இரண்டு
இட்லிக்கு இடையே வைத்தால் இட்லி பர்கர் ரெடி.
லெட்டூஸ் இலை, சீஸ் ஆகியவற்றை இட்லிகளுக்கு இடையே வைத்து, இட்லிக்கு
மேலே ஒரு செர்ரிப்பழத்தை வைத்தால் கிரீடம் சூட்டியதைப் போல ஒரு கம்பீரம்
சேரும். பக்கத்தில் கொஞ்சம் ஃபிங்கர் சிப்ஸையும் சேர்த்து வைத்தால்,
பளிச்சென்று இருக்கும் இட்லி பர்கர்!
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
No comments:
Post a Comment