Thursday, 1 September 2016

சில்லி இட்லி

                       சில்லி இட்லி

 

தேவையான பொருட்கள்


இட்லி  - 4 சதுரமாக கட் செய்தது
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
சில்லி சாஸ்        - 1    ஸ்பூன்
சோயா சாஸ்    - 1  ஸ்பூன்
தக்காளி   சாஸ்  - 1  ஸ்பூன்
குடைமிளகாய் -  நறுக்கியது  ஒன்று
பூண்டு  - நறுக்கியது 2 ஸ்பூன்
வெங்காய தாள்   --- நறுக்கியது  3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை


நான்ஸ்டிக்கடாயில்    இட்லி துண்டுகளை போட்டு பொரிப்பதற்கு  தேவையான அளவு எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்  இட்லி துண்டுகளை போட்டு  பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு நான்ஸ்டிக்கடாயில்   2   மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும்  பூண்டு  போட்டு  வதக்கி  பின்பு   வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிறிது உப்பு  சேர்த்து  2 நிமிடம் வதக்கி அதனுடன்   குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்த வதக்கவும். அதனுடன்   மூன்று சாஸ்களையும்  போட்டு  வதக்கி  அதோடு  பொரித்த  இட்லி துண்டுகளை  போட்டு வதக்கவும்.

தேவையெனில்  கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளரி இறக்கி வெங்காயத்தாள் போட்டு அலங்கரித்து   சூடாக பரிமாறவு
ம்

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.