Friday, 23 August 2019

அப்பளக் குழம்பு


தேவையானவை: 


புளி - லெமன்  அளவு
சாம்பார்  தூள்  - 2 ஸ்பூன்
அப்பளம் - 3 
கடுகு  - அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு  - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியை 1 டம்ளர்  தண்ணீர் விட்டு கரைத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வதக்கவும்.புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.