தேவையானவை:
வல்லாரைக்கீரை - அரை கட்டு,
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு,
தேங்காய் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!
( குறிப்பு: வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.)

No comments:
Post a Comment