Friday, 23 August 2019

கதம்ப சாம்பார்



தேவையான பொருள்கள் 

கேரட் - 2
கத்தரிக்காய் - 1
அவரைக்காய் - 5
உருளைக்கிழங்கு - 1
குடை மிளகாய் - 1
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் -  கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க 
சாம்பார் தூள் - 2  ஸ்பூன்
கொத்தமல்லி - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்

வறுத்து அரைக்க 

கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தனியா  - 3 ஸ்பூன்



செய்முறை

குக்கரில் துவரம் பருப்புடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து மசித்து எடுக்கவும். புளியைக் கரைத்து தனியே வைக்கவும். வறுத்து, பொடிக்க வேண்டியதை பொடித்து வைக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெந்தயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

பிறகு அத்துடன் காய் கறிகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொட்டி கொதிக்க விடவும். கொதிக்கும் போது சாம்பார் தூளைச் சேர்க்கவும். 

புளி பச்சை வாசனை போனவுடன் பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். இறக்கி வைக்கும் முன் வறுத்து, பொடித்த பொடி சேர்த:த ஒரு கொதி வந்ததும்  கொத்த மல்லி  இலை சேர்த்து இறக்கவும் .சுவையான  கதம்ப சாம்பார் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.