Friday, 23 August 2019

தூதுவளை கீரை குழம்பு


தேவையான பொருள்கள்:
தூதுவளை இலை – 2 கப்
நறுக்கிய உருளை கிழங்கு – 1
பூண்டு – 5 பல்
நறுக்கிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
தேங்காய்ப்பால் – சிறிதளவு 
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் –  அரை ஸ்பூன்
நல்லெண்ணை  –  5 ஸ்பூன்
மிளகாய் தூள்  –  1 ஸ்பான்
தனியா தூள்  –  2 ஸ்பூன்
மஞ்சள்தூள்  – சிறிதளவு
புளி – சிறிதளவு 
உப்பு - தேவையானவை 

செய்முறை :

இலையை  முள் நீக்கி நன்கு கழுவி  கொள்ளவும்.புளியைக் கரைத்து வைத்து கொள்ளவும்.கடாயில்  எண்ணைய்  ஊற்றி   சுடானதும்  தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். 

பின்பு அதே எண்ணெயில்  கடுகு  , வெந்தயம்  போட்டு  தாளித்து  பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய்  ,உருளை கிழங்கு  சேரத்து  வதக்கி  அதனுடன் கரைத்த புளியை ஊற்றி இத்துடன் பொடி வகைகள் அனைத்தையும்  சேர்த்து  அதனுடன்  வதக்கி  வைத்த  இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும். சுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.