Tuesday, 22 January 2019

நாட்டுக்கோழி ரசம்



தேவை:

நாட்டுக்கோழிக் கறி – அரை கிலோ
தக்காளி, வெங்காயம் – தலா 1 
காய்ந்தமிளகாய் – 4
மிளகு, சீரகம், எண்ணெய் – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1 துண்டு
பூண்டு – 6 பல்
மோர், சோம்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு



செய்முறை:
மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். மோருடன் மஞ்சள்தூள் கலந்து அதில் கோழிக்கறியைச் சேர்த்து கழுவி தனியாக வைக்கவும். கடாயில்  எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், தக்காளி, கோழிக்கறியைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, குக்கருக்கு மாற்றவும். பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, கறிவேப்பிலை போட்டு, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.