Saturday, 9 February 2019

பீட்ரூட் அல்வா



தேவையான பொருட்கள்
பீட்ரூட் – ஒன்று
உருளைக்கிழங்கு – ஒன்று
சக்கரை – ஒரு கப்
பால் – 3 கப்
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
முந்திரி – 8
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – கால் கப்
செய்முறை
பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும்.
அதனுடன் சக்கரை மற்றும் உப்பு சேர்த்து இடைவிடாது, சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.சூடாக பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.