Sunday, 4 November 2018

தக்காளி சாஸ்



தேவையான பொருட்கள்:
 
தக்காளி - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
 
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக வாங்கிக் கொள்ளவும். அப்போதுதான் சாஸ் கெட்டியாக நன்றாக இருக்கும். பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு,  பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பை மூடி 2 விசில் சத்தம் வரை வேக விடவும். வெந்தவுடன் அடுப்பை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து  விடவும்.
 
இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச்  சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறவும். சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது,  நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம்,

இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றி மூடி வைக்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். மிகவும் சுவையான  தக்காளி சாஸ் தயார்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.