Sunday, 4 November 2018

ஜாங்கிரி



தேவையான பொருள்கள்:
 
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
 
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு  சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக்  கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
 
இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவையான, ஜாங்கிரி தயார்

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.