Monday, 22 October 2018

லெமன் பெப்பர் மீன் வறுவல்


தேவையான  பொருள்கள் 

வஞ்சிரம்  மீன் -   அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
லெமன் சாறு  -   3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்
உப்பு   -  தேவைாயன அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 2  ஸ்பூன்
கருப்பு மிளகு - 2  ஸ்பூன்


செய்முறை 

ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகம் எடுத்து பொன் நிறமாகும் வரை வறுத்து ஜாரில் அதை போட்டு பொடித்து கொள்ளவும்.ஒரு தட்டில் அதை எடுத்து இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். 


மீன் துண்டுகளை எடுத்து கலவையில்  நன்கு  புரட்டி   20 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு கடாயில்  எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.சுவையான   லெமன் பெப்பர்  மீன்  வறுவல் ரெடி

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.