Monday, 22 October 2018

ராகி ஆலு பரோட்டா



தேவையான பொருள்கள்.

கோதுமை மாவு - அரை கப்
ராகி மாவு -  அரை கப்
உப்பு - தேவையான அளவு 
  
ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்
ஒமம் - கால் ஸ்பூன்

செய்முறை


கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு  சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும். 


மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும். சூடான தோசைக் கல்லில்  பரோட்டாவை  சிறிதளவு  எண்ணெய்  விட்டு  2  பக்கமும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.