Monday, 22 October 2018

செட்டிநாடு நண்டு வறுவல்


தேவையான பொருள்கள்:
நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:
தேங்காய்த்துருவல் - கால் கப்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
கரம்மசாலா - 1 ஸ்பூன்

செய்முறை:
சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக  அரைத்து கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும். 
கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய் தூள் இஉப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கினால் சுவையான செட்டிநாடு நண்டு வறுவல் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.