Monday, 5 September 2016

தக்காளி சாதம்

                     தக்காளி சாதம்





தேவையானவை:

 அரிசி - 200 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - கால் கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, தோலுரித்த பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நசுக்கிய இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை போட்டு வதக்கவும். பிறகு, ஆய்ந்து நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும். மணம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கி, அதில் வடித்த சாதம் போட்டு கலந்தால் தக்காளி சாதம் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.