Monday, 5 September 2016

பருப்பு சாதம்

பருப்பு சாதம்

 

 
 
தேவையான பொருட்கள் : 
 
 பாசி பருப்பு - 1 
கப் அரிசி - 2 கப் 
வெங்காயம் - 2
தக்காளி - 2
வர மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு 
 
 
செய்முறை : 
 
முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், சீரகம், வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும். 
 
 பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், அதில் தண்ணீரை விட்டு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, உப்பை சரி பார்த்து மூடி போட்டு, 3 விசில் வந்ததும் இறக்கி விடவும். பின் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். இப்போது அருமையான பருப்பு சாதம் ரெடி!!! இதனை நெய் விட்டு, ஊறுகாயுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கீரை சாதம்
கீரை சாதம்
கீரை சாதம்

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.