Monday, 5 September 2016

வெள்ளரி சாதம்

                    வெள்ளரி சாதம்



தேவையானவை: 



பச்சரிசி & ஒரு கப், வெள்ளரித் துருவல் & அரை கப், பச்சை மிளகாய் & 4,இஞ்சி & ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு & ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கறிவேப்பிலை & சிறிதளவு.


தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு & தலா அரை டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.



செய்முறை

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அந்தக் கலவை யுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.