Monday, 29 June 2020

நிலக்கடலை சட்னி



தேவையான பொருட்கள்:-

  1. நிலக்கடலை – ஒரு கப்
  2. பொட்டுக்கடலை – 1/4 கப்
  3. பூண்டு பற்கள் –  இரண்டு(பொடிதாக நறுக்கியது)
  4. பச்சைமிளகாய் – 5 (தேவைக்கேற்ப)
  5. புளி – சிறிதளவு
  6. உப்பு – தேவையான அளவ
செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடேறியதும் ஒரு கப் நிலக்கடலை மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

பின் இரண்டு பூண்டு பற்கள் மற்றும் 5 பச்சைமிளகாய், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைத்தெடுக்கவும்.

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் சிறிதளவு கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்துவிடவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.