Monday, 29 June 2020

உளுந்து சட்னி



தேவையான பொருட்கள்:-

  1. உளுத்தம்பருப்பு – அரை டம்பளர்
  2. தேங்காய் துருவல் – சிறிதளவு
  3. காய்ந்த மிளகாய் – 2
  4. புளி – சிறிதளவு
  5. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் அரை டம்ளர் வெள்ளை உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.
பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.