Sunday, 10 May 2020

செட்டிநாடு பால் பணியாரம்


தேவையான பொருட்கள்: 

பச்சரிசி - 1/2 கப் 
உளுத்தம் பருப்பு - 1/2 கப் 
தேங்காய் பால் - 1 கப் 
காய்ச்சிய பால் - 1/4 கப் 
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் 
உப்பு - 1 
சிட்டிகை சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும். 

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும். 


பின் ஒரு பௌலில் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதில் பொரித்து வைத்துள்ளதை சேர்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து பின் பரிமாறினால், சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!


No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.