Thursday, 2 April 2020

கேரட் மில்க் ஷேக்



தேவையான பொருட்கள்: 

துண்டுகளாக்கப்பட்ட கேரட் - 3/4 கப் 
பாதாம் - 16 
பால் - 2 கப் 
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை 
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 
முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். 
பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்பு அதில் கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து விட்டு, கலவையை நன்கு குளிர வைக்கவும். 
பிறகு பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இறுதியில் மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை அடித்து பரிமாறினால், கேரட் மில்க் ஷேக் ரெடி!!!



No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.