Tuesday, 27 August 2019

பேல் பூரி



தேவையான பொருட்கள் :

பொரி - 2 கப்
ஓமப்பொடி - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்
வேர்க்கடலை - 4  ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1 
உருளைக்கிழங்கு - 2
புதினா சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
லெமன்  சாறு - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - கால்  ஸ்பூன்
சாட் மசாலா -  கால் ஸ்பூன்
சீரகப் தூள்  -  கால் ஸ்பூன்
மல்லிஇலை  - சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அத்துடன், ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகதூள் என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, கடைசியாக  எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால்,  சுவையான  பேல் பூரி ரெடி

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.