தேவையான பொருள்கள் :
ஜவ்வரிசி - 100 கிராம்
சேமியா - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
தேங்காய் - ஒன்று
பால் - 200 கிராம்
முந்திரி - தேவைக்கேற்ப
உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப
ஏலக்காய் - 8
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
தேங்காயை துருவி பாலெடுக்கவும். ஒரு கடாயில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய் விட்டு வறுத்து எடுத்து விட்டு, சேமியாவை வறுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 கிளாஸ் தண்ணீரை கொதிக்கவிட்டு ஜவ்வரிசியை வேகவிடவும்.
நன்கு வெந்த பிறகு சேமியாவை போட்டு வேகவிடவும். கெட்டியாக இருந்தால் அடிப்பிடித்து விடும். சிறிது தண்ணீர் ஊற்றலாம்.
சேமியாவும் வெந்ததும் சர்க்கரையை போட்டு கரைந்தவுடன் ஏலக்காயை தூள் செய்து போட்டு முந்திரி, திராட்சை, பால் ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பாலை விட்டு இறக்கவும்.
மேலும் வாசத்திற்கு பாதி மிளகு அளவு பச்சை கற்பூரத்தையும், கடுகு அளவு ஜாதிக்காயையும் ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்து ஊற்றலாம். மிகவும் நன்றாக இருக்கும். அதிகமானால் நன்றாக இருக்காது.
No comments:
Post a Comment