Saturday, 10 September 2016

கேரட் அல்வா

                      கேரட் அல்வா



தேவையான பொருட்கள்:
கேரட் – 4
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
உலர்ந்த திராட்சை (கிஸ் மிஸ் பழம்) – 10
ஏலக்காய் – 6
கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்



செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். ஏலக்காயை பொடியாக திரித்துக்கொள்ளவும். வானலியில் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். ஒரு அகன்ற பெரிய பாத்திரத்தில் நெய்யை விட்டுச் சூடாக்கவும். சூடான நெய்யில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்கவும். கேரட் சற்று வதங்கியபின் ஏலக்காய் பொடியையும், கன்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து கிளறவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கன்டென்ஸ்டு மில்க் மற்றும் கேரட்டில் உள்ள தண்ணீர்ப்பதம் படிப்படியாக குறைந்து அல்வா போல் சுருண்டு வரும் போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கவும்.
கேரட் அல்வா செய்ய பெரிய பாத்திரத்தை பயன்படுத்த எளிதில் தண்ணீர்ப்பதம் வற்றி அல்வா பதத்திற்கு விரைவில் வந்துவிடும்.கேரட் அல்வா மிக விரைவாக செய்ய நினைக்கும் நாட்களில், கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிய பின் மிக்சியில் போட்டு லேசாக திரிக்க (30 – 45 வினாடிகள் ) கேரட் துருவல் எளிதில் கிடைத்துவிடும்.குளிர்ச்சியாக சாப்பிடும்போது ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.விருப்பப்பட்டால் வறுத்த பிஸ்தா, பாதம் பருப்பும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.