Thursday, 7 April 2016

சம்மர் ஸ்பெஷல் – மாங்காய் சாதம்






தேவையான பொருள்கள் 
கடுகு
ஜீரகம்
உளுத்தம்
 பருப்பு
 கடலை பருப்பு
வர மிளகாய்
பெருங்காயம்
முந்திரி பருப்பு
வேர் கடலை
கருவேப்பில்லை
கொத்தமல்லி விதை
அரிசி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு மாங்காய்

செய்முறை 

அரைக்க வேண்டியவைகள்: ஜீரகம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன் வர மிளகாய் - 6 வேர் கடலை - 1/4 கப் கொத்தமல்லி விதை - 1/4 டீஸ்பூன்

 தாளிக்க வேண்டியவைகள்: கடுகு - 1 டீஸ்பூன் ஜீரகம் - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 5 வேர் கடலை - 1/4 கப் கருவேப்பில்லை - சிறிது மாங்காய் - 1 (துருவியது) நல்லெண்ணெய் - தேவையான அளவு

அரிசியை வடித்தோ இல்லை கூக்கர் வைத்து வேக வைத்து நன்கு ஆற விடவும். சாதம் குலையாமல் நன்கு பருக்கைகள் தனித்தனியே பிரிந்து இருக்கும் மாறு பார்த்து கொள்ளவும். ஒரு தடிமான பாத்திரத்தில் அரைக்க வேண்டியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்தவைகளை நன்கு ஆறவைத்த பின்பு அரைத்து வைத்து கொள்ளவும்.


ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்த பின்பு தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின்பு ஒன்றாக சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து பின்பு துருவிய மாங்காயை கடைசியில் சேர்த்து, கேஸ்யை நிறுத்திவிடவும். பின்பு ஆறிய சாதத்துடன் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் கலவையும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான மாங்காய் சாதம் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.