தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment