Thursday, 22 August 2019

முட்டை சப்பாத்தி



தேவையான  பொருட்கள் :
சப்பாத்தி - 5 
முட்டை - 4 
கடலை மாவு - 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1  
பெ.வெங்காயம் - 3  
சீரகம் - அரை ஸ்பூன் 
மஞ்சள் தூள் - சிறிதளவு 
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு -  தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :
வெங்காயம், பச்ச மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும். 
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும்  ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.
அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.  ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.