Saturday, 9 February 2019

கோதுமை அல்வா


தேவையான பொருட்கள்: 


கோதுமை மாவு - 2 கப் 
சர்க்கரை - 2 கப் 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
முந்திரி - 20
பாதாம் - 7 
உலர் திராட்சை - 5 
நெய் - 1 கப் 
தண்ணீர் - 1 கப் 

செய்முறை: 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.) 

கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும் 
மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும். 

குறிப்பு: பால் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இதில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து செய்யலாம். அவ்வாறு பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பால் வாசனை அல்வாவின் சுவையையே மாற்றிவிடும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.