Sunday, 9 December 2018

பிஸி பேளே பாத்


தேவையான பொருள்கள்:

அரிசி - ஒரு கிலோ
துவரம் பருப்பு - 1/2 கிலோ
அறிந்த காய்கறிகள் - 2 கப்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 1/4 கப்

செய்முறை

பருப்பு மற்றும் அரிசியை நீரில் நன்கு கழுவ வேண்டும். நன்கு கழுவிய அரிசி, பருப்புடன் சேர்த்து குக்கரில் நறுக்கப்பட்ட காய்கறிகளைப் போடவும். தேவையான அளவு உப்பு மற்றும் சாம்பார் பொடியும் சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேகவைக்க வேண்டும். பின்னர் குக்கரைத் திறந்து அதில் புளி கரைசலைச் சேர்த்து மீண்டும் வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை இட்டு வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் முந்திரியும் சேர்த்து, பொன் வறுவல் நிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அதனுடன் முன்பு குக்கரில் தயாரித்த உணவை ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறினால் பிசி பேளே பாத் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.