தேவையானவை:
பால் – 4 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
பாதாம், முந்திரி, பிஸ்தா – சிறிது
செய்முறை:
2 லிட்டர் பாலைக் காய்ச்சி திரிய வைத்து, பனீர் செய்து கொள்ளவும். பிறகு அதை வட்டங்களாக தட்டிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, அதில் பனீர் வட்டங்களை போட்டு, இருமடங்கு சைஸ் ஆகும் வரை வைக்கவும். மீதமுள்ள 2 லிட்டர் பாலை சுண்டக்காய்ச்சி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பனீர் வட்டங்களை போட்டு ஊறவைத்து பாதாம், முந்திரி, பிஸ்தா தூவி பரிமாறவும்.

No comments:
Post a Comment