Thursday, 22 November 2018

மட்டன் பிரியாணி



தேவையான பொருள்கள் 
பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் 
மட்டன்    -  அரை கிலோ
தக்காளி - 5 
வெங்காயம் -  4
பச்சை மிளகாய் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 00 கிராம்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
புதினா இலை - சிறிதளவு
எண்ணெய் - 150 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
இஞ்சி பூண்டு விழுது - 4  ஸ்பூன 

செய்முறை
அரிசியை   அரை  மணி  நேரம்   ஊற வைக்கவும். வெங்காயத்தை    நீளமாக  நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியை  நறுக்கிக் கொள்ளவும்.மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.


குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, கிராம்பு ஆகியவற்றை போட்டு  லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் சிறிது வதங்கியதும்   இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன்     1 ஸ்பூன்
உப்பு   மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கி அதனுடன்    மிளகாய்  தூள்,   மஞ்சள்தூள் , தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.  பின்  1  டம்ளர்   தண்ணீர்      தயிர்  சேர்த்து     குக்கரை   மூடி     4  விசில் விட்டு இறக்கவும்

பின்னர்    3  கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை   தண்ணீரை  நன்கு  வடித்து விட்டு சேர்க்கவும்.    அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.கொதித்ததும்   உப்பு  சரிபார்த்து  குக்கரை மூடி வெய்ட் போட்டு 10 நிமிடம்  அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.பின் 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி சூடாக பரிமாறவும்.   சுவையான மட்டன் பிரியாணி ரெடி. 

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.