Saturday, 30 June 2018

மாம்பழ அல்வா

                                             மாம்பழ அல்வா

 

தேவையான பொருட்கள்:

மா‌ம்பழ‌ம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏல‌க்கா‌ய் - 2
நெய் - தேவையான அளவு
முந்திரி - 5


செ‌ய்முறை :

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்கி  துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

ஒரு  கடாய்  எடுத்து  அதில்   ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளற வேண்டும்.

அடிக்கடி நெய் சேர்த்து கிளரினால்  கலவை நன்கு   ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.