Thursday, 8 September 2016

செட்டிநாட்டுத் தேன் குழல்



செட்டிநாட்டுத் தேன் குழல்
 
 
 
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ

உளுத்தம் பருப்பு - 300 கிராம்

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 500 கிராம்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியைக் தண்ணீரில் நன்றாகக் கழுவி வடிகட்டி நிழலில் காய வைக்கவும்.உளுத்தம் பருப்பை இலேசாகப் பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுக்கவும்.அரிசி, உளுந்தைச் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மாவுடன் உப்பு, சீரகம், போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகும் வரை நன்றாகப் பிசையவும்.மாவைச் சிறிதாக உருட்டித் தேன் குழல் கட்டையில் வைக்கவும்.அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேன் குழல் கட்டையில் இருந்து மாவை வட்டமாகப் பிழியவும். இருபுறம் புரட்டி வெந்தவுடன் எடுக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.