பாத்திரத்தில்
எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்
சேர்த்து நன்கு வதக்கவும். இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை
கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்த பின் அரிசியை போட்டு 10 நிமிடத்தில்
வடித்துவிடவும்.தம் போட சரியாக இருக்கும்.
வெங்காயம் வதங்கியதும்
பூண்டு விழுது+புதினா கொத்தமல்லி+இஞ்சி விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+தயிர்
இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும்
சிக்கனைப் போட்டு 15 நிமிடம் வதக்கவும்.1 கப் நீர் விட்டு நன்கு
கொதிக்கவிடவும்.
கிரேவி நன்கு கொதித்து சிக்கன் வெந்ததும் எலுமிச்சை
சாறு சேர்த்து பின் வடித்த அரிசியை கொட்டி சமன்படுத்தி 2 புட்கலர்களையும்
மேலே ஊற்றி தம் போடவும். பாத்திரத்தை சுற்றிலும் அலுமினியம் பேப்பரால்
நன்கு இறுக மூடி போடவும்.
15 நிமிடம் கழித்து சாதத்தை உடையாமல்
நன்கு கிளறி விட்டால் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயாராகிவிடும்.
ஆம்பூர் பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. காரணம் அதில் நெய்,
டால்டா சேர்ப்பதில்லை
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
No comments:
Post a Comment