Sunday, 8 July 2018

மொச்சைப்பயறு கருவாட்டு குழம்பு

மொச்சைப்பயறு கருவாட்டு குழம்பு

 

தேவையான பொருட்கள் :

மொச்சைப்பயறு - 100
 கருவாடு - கால் கிலோ
நறுக்கிய சிறிய வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 2
பூண்டு -5 பல்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 3 ஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு
கடுகு  - கால் ஸ்பூன்
கருவேப்பிலை  - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

மொச்சைப் பயறைஊற வைத்து  குக்கிரில் 4  விசில் விட்டு  வேக வைத்துக் கொள்ளவும்.

 கருவாட்டை  சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.

புளியை நன்கு கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி அதில் புளிக்கரைசலை ஊற்றவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் மொச்சைப்பயிறு,  கருவாட்டை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான  மொச்சை  கருவாட்டு குழம்பு ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.