Thursday, 30 August 2018

கடலை மாவு சாம்பார்



தேவையான பொருட்கள் :


  • பெரிய வெங்காயம் -1
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -2
  • கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு -1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

செய்முறை :

தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் கருவேப்பில்லை -தேவையான அளவு
முதலில் வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக வெட்டிக்கொள்ளவும் .பின்பு இஞ்சி பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும் (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்).

]பின்பு கடலை மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய்,வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடலை மாவு சாம்பார் தயார். குறிப்பு:கடலை மாவு ஊற்றி பின்பு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் இல்லையென்றால் சாம்பார் கெட்டியாக வரும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.