Sunday, 1 July 2018

சமோசா

சமோசா

 

தேவையான பொருள்கள்:

மைதா - 2 கப்,
நெய் - 4   
ஸ்பூன்,
தண்ணீர் - 1 கப்,
ஓமம் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

 

ஸ்டஃப்பிங்கிற்கு...

உருளைக்கிழங்கு - 3,
பச்சைப்பட்டாணி -  1 கப்,
பச்சைமிளகாய் - 1,  
இஞ்சி - 1/2 துண்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க..

இஞ்சி - 1/4 துண்டு,
பட்டை- 1/4 இஞ்ச் துண்டு 1,
மிளகு- 2,
கிராம்பு - 1,
ஏலக்காய்-1,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,

செய்முறை

சமோசா மேல் மாவு தயாரிக்க...

மைதா மாவுடன்   உப்பு,  நெய் சேர்த்து பிசையவும். மாவை நன்கு பிசைந்து துணியால் மூடி அரை மணிநேரம் முதல் முக்கால் மணிநேரம் வரை வைக்கவும்.

உருளைக்கிழங்கு, பட்டாணியை தனித்தனியே வேக வைக்கவும். பிறகு உருளைக் கிழங்கைத் தோல் உரித்து மசித்து கொள்ளவும்

கொடுத்துள்ள காரப் பொருட்கள்அனைத்தையும் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு சலித்துக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு வறுக்கவும். இத்துடன் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும்.

இத்துடன் பட்டாணி, மிளகாய் பொடி, மசாலா பொடிகள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். இவை நன்கு  வதங்கியவுடன் எடுத்து ஆறவிட வேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மாவை வட்டமான சப்பாத்திகளாக இட்டு அதில் மேலே செய்துள்ள கலவையை வைத்து பின்னர் முக்கோணமாக மடித்து வைத்துக் கொள்ளவும்.

அதை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.