Thursday, 4 October 2018

செட்டிநாடு இறால் குழம்பு


தேவையான பொருட்கள்: 

இறால் -  அரை கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 
நறுக்கிய தக்காளி - 1 
அரைத்த பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் -  அரை  கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு,, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து  எடுத்து வைக்கவும்
கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து,   வறுக்கவும். 
பிறகு  ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நைஸாக  அரைக்கவும். 
பின்னர் மற்றொரு  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு   வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக துவையல் அரைத்து கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து,   எண்ணெய்  ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து,  5 நிமிடம் வதக்கவும். 
தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு 10 நிமிடம்  வதக்கவும்.
பின் அதில் தேங்காய்  சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி,  இறாலைப் போட்டு, அடுப்பை  சிம்மில்  வைத்து  10  நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.