Saturday, 30 June 2018

ரசகுல்லா

                                                          ரசகுல்லா

 

தேவையான பொருட்கள்: 

ஒரு லிட்டர் பால்
150 கிராம் பொடித்த சர்க்கரை
பாகு காய்ச்ச அரை கிலோ சர்க்கரை.

செய்முறை:

சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும்.அதை, சுத்தமான, மெல்லிய துணியில் கட்டி, தண்ணீரை வடிய விடவும்.

திரிந்த பகுதியைத் திரட்டி வேறு பாத்திரத்தில் போட்டு, பொடித்த சர்க்கரை கலந்து, கையால் நன்கு பிசையவும். இந்தக் கலவை நன்கு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும்.

பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, பாகு காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்து, ஐந்து நிமிடம் கொதித்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சூடான ரசகுல்லா ரெடி!

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.