Saturday, 18 November 2017

வெள்ளை ஆப்பம்

                                                  வெள்ளை ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
தேங்காய் – ஒரு மூடி
சர்க்கரை – தேவையான அளவு
சமையல் சோடா பவுடர் – 1
சிட்டிகை உப்பு – சிறிதளவு

செய்முறை:

பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவு ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் ஒரு தேங்காய் திருகி நன்றாக அரைத்து (ஆப்பத்திற்கு தொட்டு சாப்பிட தேவையான அளவு தேங்காய் பால் இதிலிருந்தே வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்) மாவுடன் சேர்த்து 1 சிட்டிகை (சமையல்) சோடா பவுடர் போட்டு கரைத்து இளம் சூட்டில் ஆப்பசட்டியில் ஊற்றி எடுக்க வேண்டும். ஆப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள எடுத்து வைத்த தேங்காய் பாலுடன் தேவையான அளவு சர்க்கரையை (விருப்பமென்றால் சிறிதளவு ஏலக்காய் பொடி, சுக்கு பவுடர்) சேர்த்துக் கொள்ளலாம். மேலும், சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, வெல்லம் இரண்டையும் சமஅளவு பாகுவாக்கி மாவில் கலந்து இனிப்பு ஆப்பமாக ஊற்றலாம்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.